13 Feb 2012

அணு அணுவாய்... - 3


கல்பாக்கத்தில் நிறுவப்பட்டுள்ள அணு உலை முழுக்க முழுக்க உள்நாட்டுத் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது. சுனாமிக்கு கூட சுருண்டுவிடாமல் பாதுகாப்பில் ஓங்கி நிற்கிறது என மீண்டும் மீண்டும் இந்திய விஞ்ஞானிகளும், ஆட்சியாளர்களும் கல்பாக்கத்தினையே கைகாட்டுகின்றனர். ஆனால் தெகல்கா பத்திரிக்கையின் கள ஆய்வு கல்பாக்கதின் கொடூர முகதினை காட்டுகிறது. அங்கு அடிக்கடி அதிக கதிர்வீச்சு வெளிப்படுவதும் அதனால் அதில் வேலை செய்பவர்கள் கதிர்வீச்சின் தாக்குதலுக்கு தொடர்ச்சியாக அளாவதும், இக் கதிர்வீச்சு தாக்குதல் குறித்து கல்பாக்கம் அணு உலை நிறுவத்திற்கும் அதன் தலைமையிடமான பாபா அணு ஆராய்ச்சி கழகத்தின் இயக்குனருக்கும் இடையே இரகசிய கடிதப் போக்குவரத்து நடைபெறுவதும் கடித எண்ணுடன்  (BARCFEA/ 03/03/131 dated 24 January 2003) சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
1980 முதல் கல்பாக்க அணு உலை செயல்பட்த் தொடங்கியதிலிருந்து, புற்றுநோய், தைராய்டு கோளாறு போன்ற நோய்கள் அதிகமாக கல்பாக்கதினை சுற்றியுள்ள கிராமங்களில் அதிகமாக பாதித்துள்ளது. கல்பாக்கத்திலிருந்து 5 கி.மீ தூரத்திலுள்ள சத்திரக்குப்பத்தினைச் சார்ந்த அணு உலையில் ஒப்பந்த்த் தொழிலாளியின் மகள் கண் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளால். அவளின் இந்நிலைக்கு அணு உலையிலிருந்து வெளியான கதிர்வீச்சே காரணமென மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள் உறுதிசெய்துள்ளனர்.

கூடங்குளதில் அணு உலை நிறுவப்படுமானால் தங்கள் பகுதியில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என வாதிப்பவற்கள் கல்பாக்க அணு உலை தொழிலாளர்களின் நிலையினை உணர்ந்து பின்பு அதற்கு ஆதரவு தெரிவிக்கட்டும். இன்று நிலுவையில் இருக்கும் மின்வெடினால் எரிச்சலுற்று அணு உலையினை ஆதரவிப்பவர்கள் ஒரு நிமிடம் சற்று சிந்திக்கட்டும், வருங்காலத்தில் அணு உலைக் கதிர்வீச்சினால் நம் (உங்கள்) வீட்டுக் குழந்தைகளையும் கல்பாக்க சிறுமியைப் போல தீரா நோயின் கையில் ஒப்படைக்க நாமே (நீங்களே) ஆதரவு தெரிவிப்பதற்கு ஒப்பானது. மேலும் 2010-11, 2011-12 மற்றும் 2012-13 ஆம் ஆண்டிற்கான தமிழகத்தின் மின் தேவையானது முறையே 12860 மெ.வா, 14224 மெ.வா மற்றும் 15517 மெ.வா என 17வது மின்னாற்றல் கணக்கெடுப்பு தெரிவிக்கின்றது. இத்தகைய மின் தேவையை நிவர்த்தி செய்வதற்கு தமிழக மின் வாரியம் கூடுதலான மின் உற்பத்தித் திட்டங்களை முன்மொழிந்துள்ளது. அதில் மாநில அரசு செயல்படுத்த வேண்டிய அனல் மின் திட்டங்கள், புனல் மின் திட்டங்கள் மற்றும் மத்திய அரசுடன் இணைந்து செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் ஆகியன அடங்கும். நமது கேள்வியெல்லாம் அணு உலை ஆதரவாளர்கள் ஏன் இந்த அனல் மின் திட்டங்கள், புனல் மின் திட்டங்களை விரைந்து முடிக்க கோருவதில்லை. இவர்களுக்கு எல்லாம் இத்தகைய திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளன என்பதே தெரியாது. அரசும், ஊடகங்களும் தொடர்சியாக பரப்பும் அணு உலை ஆதரவு பிரச்சாரத்தினையே இவர்களும் கிளிப்பிள்ளையினைப் போல மீண்டும் மீண்டும் கூறுகிறார்கள். சுயசிந்தனையில்லாமல் மாற்றார் கூறுவதையே தாங்களும் கூறும் இந்த அணு உலை ஆதரவாளர்களின் பேச்சினை பெரிதுபடுத்தி அணு உலையினை செயல்படுத்த அனுமதிக்க முடியாது.
அதேபோல், கூடங்குளம் அணு உலை செயல்படாத்தால்தான் தமிழகதில் 8 மணி நேர மின் வெட்டு அமலில் உள்ளது. ஆகவே அணு உலை விரைவாக செயல்பட்டால்தான் தமிழதில் ஒளி பிறக்கும் என்ற பொய் பிரச்சாரம் முடுக்கிவிடப்பட்டுள்ளது. அதனை சிறு/குறு தொழிற்சாலை நட்த்துபவர்கள், வணிகர்கள், இன்னபிற வர்த்தக நிறுவனங்களை நட்த்துபவர்கள் மற்றும் இல்லத்தரசிகள் உண்மையென நம்பி அணு உலைக்கு ஆதரவாக (எதுல இருந்துனாலும் எடுத்து எங்களுக்கு கரண்ட் குடு என்பதைப் போல) குரலெழுப்புகின்றனர். அனால் இவர்கள ஒர் உண்மையினை உணர்ந்தார்களா என்பது தெரியவில்லை. அப்படியே அணு உலை செயல்படத் தொடங்கி அதிலிருந்து மின் உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டாலும் கூட அந்த மின் சாரத்தினை எல்லாம் எடுத்துவந்து இவர்களின் மின் இணைப்புப் பெட்டியில் கொடுக்கப்படப்போவதில்லை என்பதுதான் உண்மை. அப்போதும் இதே போல்தான் மின் வெட்டு தொடரும். இன்று அணு உலையினைக் காரணம் கூறுபவர்கள் அன்று வேறு எதேனும் காரணத்தினை கூறப்போகிறார்கள். அதையும் ஆமாம் ஆமாம் என ஒத்துக்கொள்ளத்தான் போகிறார்கள். ஏனெனில் அணு உலை மின்சாரம் இங்குள்ள சிறு/குறு தொழிற்சாலை நட்த்துபவர்கள், வணிகர்கள், இன்னபிற வர்த்தக நிறுவனங்களை நட்த்துபவர்களுக்கு அல்ல நமது வணிகத்திற்கும், சிறு/குறு தொழிற்சாலைகளுக்கும் ஆப்படிக்க வருகைதரும் வால் மார்ட் போன்ற அந்நிய நிறுவங்களுக்குதான் என்பதைக் கூட இவர்களால் புரிந்துகொள்ள முடியாவிட்டால் நமது மக்களை என்னவென்பது?
******
இறுதியாக அணு அறிவாளிகள் தமிழக காங்கிரசாருக்கு ஒரு வேண்டுகோள். அவர்களது இத்தாலியத் தலைவியிடம் சென்று கேட்டுப்பார்கட்டும் அவரது தாய் வீடான இத்தாலியில் அணு உலைகள் இருக்கின்றனவா என்று. ”இல்லை” என்ற தலையசைப்பத்தான் பதிலாகப் பெறுவார்கள். ஆம்! இத்தாலியில் அணு உலை கிடையாது. இத்தாலிய மக்கள் தங்களுக்கு அணு உலை வேண்டாமென்பதை ஆணித்தரமாக அரசிற்கு தெரிவித்த முறை – பொது சன வாக்கெடுப்பு.
பொது சன வாக்கெடுப்பு என்பது மக்களைப் பாதிக்கக்கூடிய பிரச்சனைக்கு தீர்வினை எட்டும் வகையில் அந்த மக்களிடமே நடத்தப்படும் ஒரு வாக்கெடுப்பு’. இவ்வாக்கெடுப்பினால் மக்கள் ஆட்சியாளர்கள் திணிக்க்கூடிய தீர்வினை ஏற்றுக் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. தங்களுக்கு தேவையான அல்லது பிரச்சனை குறித்தான தங்களது முடிவினை ஆதாரப்பூர்வமாக பதிவு செய்ய முடியும்.
இதே போல்தான் ஜீன் 2011ல் இத்தாலிய மக்களிடம் அணு உலை வேண்டுமா வேண்டாமா என ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது அவ்வாக்கெடுப்பில் 94% மக்கள் அணு உலைக்கு எதிராக வாக்களித்துள்ளனர். இதுபோன்ற ஒரு வாக்கெடுப்பு 1987லியே இத்தாலிய மக்களிடம் நட்த்தப்பட்டு அதிலும் மக்கள் அணு உலைக்கு எதிராக வாக்களித்த்தன் விளைவாக அப்போதிருந்த இத்தாலிய அரசு இயக்கத்திலிருந்த எல்லா அணு உலைகளையும் மூட உத்தரவிட்ட்து. கடைசி அணு உலை 1990ல் மூடப்பட்ட்து.
இதே போல் ஏன் தமிழகத்திலும் ஒரு பொது வாக்கெடுப்பினை நட்த்தக்கூடாது. இத்தாலியிலிருந்து வந்தவரை தலைவராக ஏற்றுக் கொண்ட மக்கள் தங்களது பிரச்சனைக்கு தீர்வு காண இத்தாலியின் சனநாயக நடைமுறையினை ஏற்றுக் கொள்ள மாட்டார்களா?

11 Feb 2012

அணு அணுவாய்... - 2


தஞ்சையை தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்பதுண்டு; கியுபாவை உலகத்தின் சர்க்கரைக் கிண்ணம் என்று அழைப்பதுண்டு; ஏன்? தஞ்சையில் நெற்கதிரும், கியுபாவில் கரும்பும் அதிகமாக விளையும் பொருட்கள். எந்த ஒரு நாடும் தனது பொருளாதாரத்தினை தன்னிடம் அதிகமாக உள்ள இயற்கை மூலப் பொருளினை அடிப்படையாக கொண்டே அமைத்துக் கொள்ளும். ஆனால் அணு உலை எரிபொருள்களான யுரேனியம் மற்றும் புளுட்டோனியத்தினை அதிகமாக கொண்டிருக்கும், நமது அறிவாளிகள் உதாரணமாக கூறும் மேலை நாடுகளின் நிலையை கீழே உள்ள அட்டவணையை கொஞ்சம் பார்த்தாலே புரிந்துவிடும். நம்மை எத்தனை முட்டாள்களாக இவர்கள் நினைத்துள்ளார்கள் என்று.

உலக நாடுகளில் உள்ள புளுட்டோனிய எரிபொருளின் சதவீதம் மற்றும் அங்கு செயல்படும் அணு உலைகளின் எண்ணிகை
வ.எண்
நாட்டின் பெயர்
தோரியத்தின் இருப்பு (டன்)
உலக தோரிய அளவில் சதவீதம் (%)
அணு சக்தி மூலம் பெறப்படும் மினசாரம் (kWh)
இயக்கத்தில் உள்ள அணு உலைகளின் எண்ணிக்கை
கட்டுமானத்தில் உள்ள அணு உலைகளின் எண்ணிக்கை
திட்டமிடப் பட்டுள்ள அணு உலைகளின் எண்ணிக்கை
1
ஆஸ்த்திரேலியா
489,000
19
---
---
---
---
2
அமெரிக்கா
400,000
15
807
104
1
7
3
துருக்கி
344,000
13
0
0
0
4
4
இந்தியா
319,000
12
20.5
20
6
17
5
வெனிசுலா
300,000
12
---
---
---
---
6
பிரேசில்
302,000
12
14
2
2
0
7
நார்வே
132,000
5
---
---
---
---
8
எகிப்து
100,000
4
0
0
0
0
9
இரசியா
75,000
3
159
32
10
14
10
கிரின்லேண்ட்
54,000
2
---
---
----
----
11
கனடா
44,000
2
85
17
3
3
12
தென் ஆப்ரிக்கா
18,000
1
13
2
0
0


உலக நாடுகளில் உள்ள யுரேனிய எரிபொருளின் சதவீதம் மற்றும் அங்கு செயல்படும் அணு உலைகளின் எண்ணிகை
வ.எண்
நாட்டின் பெயர்
யுரேனியத்தின் இருப்பு (டன்)
உலக யுரேனிய அளவில் சதவீதம் (%)
அணு சக்தி மூலம் பெறப்படும் மினசாரம் (bkWh)
இயக்கத்தில் உள்ள அணு உலைகளின் எண்ணிக்கை
கட்டுமானத்தில் உள்ள அணு உலைகளின் எண்ணிக்கை
திட்டமிடப் பட்டுள்ள அணு உலைகளின் எண்ணிக்கை
1
ஆஸ்த்திரேலியா
1,673,000
31
---
---
---
---
2
கசகஸ்த்தான்
651,000
12
0
0
0
2
3
கனடா
485,000
9
85
17
3
3
4
இரசியா
480,000
9
159
32
10
14
5
தென் ஆப்ரிக்கா
295,000
5
13
2
0
0
6
நாமீபியா
284,000
5
---
---
---
---
7
பிரேசில்
279,000
5
14
2
2
0
8
நைஜீரியா
272,000
5
---
---
---
---
9
அமெரிக்கா
207,000
4
807
104
1
7
10
சீனா
171,000
3
71
15
26
51
11
ஜோர்டான்
112,000
2
0
0
0
0
12
உஸ்பேகிஸ்தான்
111,000
2
---
---
---
---
13
உக்ரைன்
105,000
2
84
15
0
2
14
இந்தியா
80,000
1.5
20.5
20
6
17
15
மங்கோலியா
49,000
---
---
----
----
----

அணு உலை எரிபொருளில் உலகத்தின் முதலிடம் வகிகும் ஆஸ்த்திரேலியாவிற்குதான் அணு உலை இயக்குவதில் எல்லா நியாமும் இருக்க முடியும். ஆனால் நடப்பது என்ன? உலகின் மொத்த தோரியதில் 19 % யும் (489,000 டன்), யுரேனியத்தில் 31% (1,673,000 டன்)யும் தன்னிடம் கொண்டிருக்கும் ஆஸ்த்திரேலியா ஒரு அணு உலையைக் கூட இயக்கவில்லை. மாறாக  இந்தியாவிற்கு யுரேனியத்தினை ஏற்றுமதி செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தியாவும் அதில் கைய்யொப்பம் இட்டுள்ளது. அதே சமயம், ஆஸ்திரேலியா தனது நாட்டின் பல பகுதிகளை ”அணுசக்தி நீக்கப்பட்ட பகுதிகளாக” (Nuclear Free Zone) அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியா மட்டுமல்ல, அமெரிக்கா, கனடா, ஜப்பான், இத்தாலி, நியுசிலாந்து மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகள் தங்கள் நாடு முழுவதையுமோ அல்லது நாட்டின் ஒரு பகுதியையோ “அணு சக்தி நீக்கப்பட்ட பகுதியாக” அறிவித்துள்ளன. இந்தியாவில் எந்தப் பகுதியாவது “அணு சக்தி நீக்கப்பட்ட பகுதியாக” அறிவிக்கப்பட்டுள்ளதா? இங்கிருப்பவர்களுக்கு மக்களைப் பற்றியோ, சுற்றுச்சுழலையோ பற்றியோ எந்தக் கவலையும் கிடையாது.
இந்தியாவை விட யுரேனிய எரிபொருளை அதிகம் கொண்டிருக்கும் நாடுகள் எல்லாம் ஏன் அணு உலைகளை தங்கள் நாட்டில் நிறுவ முன் வரவில்லை என சிந்திக்க வேண்டியுள்ளது.
இந்தியாவிற்கு நிகராக தோரியத்தினைக் கொண்டிருக்கும் நாடு வெனிசுலா. அமெரிக்க வல்லாதிக்க அரசினை எதிர்த்து வெனிசுலாவை முன்னேற்றப்பாதையில் இட்டுச் செல்லும் அதிபர் சாவேஸ் ஜப்பானின் புகுசிமா அணு உலை விபத்திற்குப்பின் இது (அணு உலை) மிகவும் ஆபத்தானது மற்றும் ஒட்டு மொத்த உலகிற்கே ஓர் அச்சுறுத்தல்” என அணு உலைகளுக்கு எதிராக தனது கருத்தினை மிக ஆழமாக பதிவு செய்துள்ளார். அது மாத்திரமல்ல, மக்களுக்கு தீங்கு பயக்கும் என்ற ஒரே காரணத்திற்காக தனது நாட்டில் நிறுவப்பட இருந்த அணு உலைத் திட்டங்கள் அனைத்தையும் நிறுத்திவிட்டார். இங்குள்ள அரசியல்வாதிகளை என்ன கூறுவது?