11 Feb 2012

அணு அணுவாய்... - 1


கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்ட விசயத்தில் மத்தியில் ஆளும் காங்கிரசு அரசு தனது இறுதிகட்ட  நடவடிக்கைக்கு தயாராகியுள்ளது. எல்லா அரசுகளையும் போல் மக்களை நேர்மையாகவும் சனநாயகப் பூர்வமாகவும் எதிர்கொள்ள திராணியில்லாமல் கோழைகளின் இறுதி ஆயுதமான வன்முறையை கையில் எடுத்துள்ளது. பேச்சு வார்த்தைக்கு சென்ற போராட்டக்கார்ர்கள், பெண்கள் மீது நட்த்தியுள்ள தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
மேலிடத்து எஜமானர்களுக்கு வாலாட்டிக் மக்களைப் பார்த்து கடித்துக் குதற குறைத்துக் கொண்டிருக்கும் தமிழக காங்கிரசு; கலாச்சார ரவுடிகளான இந்து முன்ன்னியினர்;  எதற்காக அணு உலையை எதிர்கிறோம்  என்பது கூட தெரியாமல் அணு உலையை ஆதரிக்கும் கூட்டம்; எமாற்றித் திரியும் இந்திய விஞ்ஞானிகள் என பலதரப்பு எதிர்ப்புகளையும் மீறி தொடர் போராட்டத்தை நட்த்திக் கொண்டிருக்கும் கூடங்குளம் பகுதி மக்களுக்கு நமது ஆதரவினையும் வாழ்துக்களையும் தெரிவிக்க வேண்டிய தருணம் இது.
*******
தமிழகத்தில் கூடங்குளம் அணு உலைக்கு ஆதரவாக மிகத் தீவிரமாக பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் ஒரே கட்சி காங்கிரசு ஒன்றுதான். எப்பொழுதும் தங்களுக்குள் கடித்துக் குதறிக் கொள்ளும் இதன் தலைவர்கள் அனைவரும் இப்பிரச்சனையில் ஒரே மேடையில் கை கோர்த்து நிற்பதன் காரணம் அவர்களது மேலிடத்து எஜமானர்களின் ஏவல்தான். மீண்டும் ஆட்சிக்கு வருவது நடக்கவே நடக்காது என நன்றாக உணர்ந்த மன்மோகன் சிங், எங்கோ இருந்த தன்னை இன்று இந்தியப் பிரதமராக வீற்றிருக்க செய்திருக்கும் அமெரிக்காவிற்கு உதவ இதை விட்டால் தக்க தருணம் மீண்டும் கிடைக்காது என்பதால் தான் இத்தகைய விரைவு.
ஏன் இத்தனை அவசரம் இந்த தமிழக காங்கிரசார்க்கு இந்த விசயத்தில்? அவர்கள் கூறும் காரணம் தமிழகத்தில் நிழவும் மின் பற்றாக்குறை. தமிழர்களின் புற இருட்டை அகற்றுவதில் இத்தனை கரிசனமா இவர்களுக்கு? ஏன் இந்தக் கரிசனம் முள்ளிவாய்காலில் லட்சக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்க இவர்களின் மேலிடம் இராஜபக்சேவிற்கு உதவிய போது இல்லாமல் போனது? கேரளத்தில் ஆளும் இவர்களின் பங்காளி தமிழர்களின் வாழ்வாதரமான முல்லைப் பெறியாறு அணையை உடைத்தெரிவதற்கு ஒற்றைக்காலில் நிற்பதை கண்டிப்பதில் ஏன் இந்த தீவிரம் இல்லை? தமிழக மீனவர்கள் தினந்நோறும் இலங்கை இராணுவத்தால் துன்புறுத்தப்படும் போது ஏன் இவர்கள் வாய் திறப்பதே இல்லை?
மாறாக, தமிழகமே இராஜீவ் கொலையில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு தண்டனையை ரத்து செய்வதற்கு ஆதரவாக நிற்கும் போது இந்த காங்கிரசார் மட்டும் அவர்களைத் தூக்கிலிட்டே ஆக வேண்டுமென தீவிர பிரச்சாரத்தை மேற்கொள்கிறார்கள். தொடச்சியாக தமிழக மக்களுக்கு எதிராக செயல்படும் தமிழக காங்கிரசாரை என்ன செய்வது? இத்தனைக்கும் தமிழகத்தில் ஒரு வழுவான அமைப்பும் கிடையாது இந்தக் காங்கிரசு. தமிழக காங்கிரசார் மனிதர்களாக இல்லாமல் மண் சுவராக இருந்திருப்பார்களேயானால் அந்தச்சுவரை ஒரு எருமை கூட உரசாது. இவர்கள் தமிழக மக்களின் நலனுக்காக கூடங்குளம் அணு உலை நிறுவப்படுவதாக்க் கூறுவதை எப்படி எடுத்துக் கொள்வது?
*******
அணு உலை வேண்டுமா, வேண்டாமா என தீர்மானிக்க வேண்டியது விஞ்ஞானிகள்தான்” என்கிறார் நிலக்கிழார் மற்றும் மத்திய அமைச்சரான வாசன். தங்களுக்கு எது வேண்டும், எது வேண்டாம் என தீர்மானிக்கும் உரிமை மக்களுக்கு கிடையாதா? இவர்கள் திணிப்பதைத்தான் மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமென நிர்பந்திப்பதை சர்வாதிகாரம் என்றுதானே கூற வேண்டும். மக்களைச் சந்தித்து கட்சி வளத்திருந்தாலோ, தனித்து நின்று மக்களைச் சந்தித்து ஓட்டு வாங்கி பதவியை பெற்றிறுந்தாலோ வாசனுக்கு மக்களைப் பற்றிய நினைவிருந்திருக்கும். சரி இவர் கூறும் விஞ்ஞானிகளின் தரம்தான் என்ன? அலைக்கற்றை ஊழலில் சிக்கி கேவலப்பட்டு நிற்கிறார்கள்.
இவர்கள் அறுதி இறுதியாக கை நீட்டப்படுபவர் இந்திய ஆளும் வர்க்கத்திற்காக கனவு காணும் அப்துல் கலாம் அவர்கள். இந்தியாவை அணு வல்லரசாக ஆக்கியே ஆக வேண்டுமென கங்கனம் கட்டிக் கொண்டு இருப்பவர். ஒரு நாள் அணு உலையை சுற்றிவந்து விட்டு அணு உலை பாதுகாப்பானது என பேட்டி தருகிறார். வேறு எப்படி தருவார்? தனது பேட்டியில், ”நாங்கள் விண்வெளி ஆய்வத்திலிந்து இராக்கெட்டுகளை அனுப்பும் போது எத்தனையோ இடர்பாடுகளையும் தோல்விகளையும் சந்தித்துள்ளோம். ஆனால் அதையும் மீறி இராக்கெட்டுகளை விண்ணில் செலுத்தி சாதனை படைக்கவில்லையா? அதுபோல்தான் அணு உலையில் எதேனும் குறையிருந்தாலும் படிபடியாக நிவர்த்தி செய்துவிடலாம்” என்கிறார். இவர்கள் சோதனை செய்து பார்க்க மக்களின் உயிர்தான் கிடைத்த்தா? இவர்கள் கூறும் விஞ்ஞானிகள் மக்களைப் பற்றி சிந்திக்கும் லட்சனம் இதுதான்.


மேலைநாடுகளைப் போல மின்சாரத்தில் தன்னிறைவு பெற வேண்டுமானால் அவர்களைப் போலவே நாமும் அணு உலைகளை நிறுவி மின் உற்பத்தியை பெருக்க வேண்டுமென்ற கருத்தை விஞ்ஞானிகளும், அவர்களிடமிருந்து காங்கிரசு போன்ற கட்சிகளும், ஒரு பொதுக் கருத்தாக இதை மக்களிடம் பிரச்சாரம் செய்ப்படுகிறது. ஆனால் உண்மை என்ன?


No comments:

Post a Comment